Wednesday, November 11, 2009

முதல் தேதி

மாலை நேரம் பணிமுடித்து
இல்லம் திரும்பினேன் இனிதாக
சோலை மரத்து பறவைகளும்
கூடுகள் நோக்கி பறந்தன
சோர்வுடன் வந்த என்னை
களிப்புடன் வந்தே வரவேற்றாள் மனைவியும்
சிரிப்புடன் நானும் நுழைந்தேன்
காரணம் இன்று முதல் தேதி